நகராட்சியில் நடக்க இருந்த பொது ஏலம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு

பொது ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதால் ஏலதாரர்கள் அதிருப்தி

Update: 2024-02-22 12:33 GMT

பொது ஏலத்தில் தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற இருந்த பொது ஏலம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

ஏலம் எடுக்க வந்தவர்கள் கடும் வாக்குவாதம் போலீசார் சமரசம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியின் கீழ் இயங்கும் வணிக வளாகங்கள், சைக்கிள் ஸ்டாண்ட் ,நகராட்சி கழிப்பிடம், உள்ளிட்ட இதர பணிகளுக்கான பொது ஏலம் இன்று பொது ஏலம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஏலம் எடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி முன்பு நின்று கொண்டிருந்தனர். திடீரென நகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று நடைபெற இருந்த பொது ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி தற்போது இறுக்கமான சூழ்நிலை உள்ளதா நகராட்சி நிர்வாக நலன் கருதி அனைத்து பொது பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்பு புள்ளிகள் ஒத்திவைக்கப்படுகிறது பின்னர் தேதி அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஏலம் எடுக்க வந்த நபர்கள் காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.  அதனால் கடுப்பான ஏலத்தாரர்கள் நகராட்சி நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை சமரசம் செய்தனர். இதனால் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News