டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு - ஆட்சியர் கற்பகம் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் குறித்து ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தார்.

Update: 2024-05-17 01:58 GMT

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் TNPSC - குரூப் 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளிடம் இங்கு வழங்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் பார்வையிட்டு, தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வு மாணவ,மாணவிகளிடம் வினாக்கள் எழுப்பி விளக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி வகுப்புகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற வசதிவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இன்று ஏராளமான கல்வி வாய்ப்புகளையும், உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும், உயர்கல்வியை முடித்தவர்கள் பணிக்கு செல்வதற்கு தேவையான தொழில்நெறி வழிகாட்டி பயிற்சி வகுப்புகளையும் தமிழக அரசு நடத்திவருகின்றது.  அனைத்து மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் தேர்வு எழுதி அரசு அலுவலர்களாக ஆக வேண்டும் என மனமார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா மற்றும் மாவட்டதிறன் பயிற்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News