சேலம் சூரமங்கலத்தில் பரிதாபம் - மெக்கானிக் தற்கொலை
சேலம் சூரமங்கலத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை;
Update: 2024-02-29 05:35 GMT
தற்கொலை
சேலம் சூரமங்கலத்தை அடுத்த புதுரோடு, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23), இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சுரேஷ் வீட்டுக்கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கப்படவில்லை. உடனே வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. வீட்டில் மின்விசிறியில் சுரேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சுரேசுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாகவும், அந்த பெண் சுரேசை விட்டு விட்டு வேறு நபருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.