திருப்பூர் குமரன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன் 92வது தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2024-01-12 07:08 GMT

திருப்பூர் குமரன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள அவரது நினைவகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காலத்தில்  1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி திருப்பூரில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு திருப்பூர் குமரன் சாலையில் கையில் ஏந்திய தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்ற திருப்பூர் குமரன் ஆங்கிலேய காவல்துறையினரால் அடிபட்டு கையில் ஏந்திய தேசியக் கொடியுடன் உயிரிழந்தார். 

Advertisement

அவரது தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மேயர் தினேஷ்குமார் ,  சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , அமமுக , பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும்  பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News