சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது! செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-12-17 10:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவரை கைது செய்து சிறையில் அடைத்த கறம்பக்குடி போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து கஞ்சா போதை மருந்து ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் போதைப் பொருளான கஞ்சா சட்ட விரோதமாக புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதாக கறம்பக்குடி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் திருமணஞ்சேரி ஆர்ச் அருகே கறம்பக்குடி போலீசார் வாகன தனிக்கோயில் ஈடுபட்டனர்.

அப்போது TN-49-BB-8587 யமஹா எப்பிசட் என்ற இருசக்கர வாகனத்தை பரிசோதனை மேற்க்கொள்ளும் போது கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் சிவன்காளை (41) கறம்பக்குடி நரங்கியப்பட்டு வடக்கு தெரு பகுதியை சேர்ந்த வேம்பையா மகன் ரெங்கநாதன் (27) ஆகிய இருவரும் ஒன்றரை கிலோ கஞ்சாவை புதுக்கோட்டையிலிருந்து கறம்பக்குடிக்கு விற்பனைக்காக கொண்டுச் சென்றது தெரிய வந்தது அவர்களிடம் இருந்து போலீசார் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து சிவன்காளை மற்றும் ரெங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News