கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
Update: 2023-11-10 06:02 GMT
மானாமதுரை சிப்காட் காவல் நிலையம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சந்தன கருப்பு. இவர் கல்குறிச்சி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மேலவாணியங்குடி சேர்ந்த தனபாலன் என்பவரின் மகன் கோபால் மற்றும் ஆவரங்காட்டை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 75 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 550 பணம், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.