மன்னார்குடியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது
Update: 2023-11-09 07:52 GMT
கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பு தணிக்கையில் ஈடுபட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டதன் அடிப்படையில் தனிப்படையினர் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடி கீழ்பாலம் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவரின் மகன் சார்ப் என்கிற ராஜகணபதி மற்றும் மன்னார்குடி மேலவாசல் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த பெரமையன் என்பவரின் மகன் தணேஷ்மாதவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.