திருவாரூரில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்
Update: 2023-12-20 02:28 GMT
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருவாரூர் துர்க்காலயா ரோடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன்கள் ரமேஷ் குமார் வயது 42 மற்றும் விஜய் ஆனந்த் வயது 46 ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து செல்போன் மூன்று மற்றும் பணம் ரூபாய் 2700 பறிமுதல் செய்யப்பட்டது.