கார் மினி லாரி மோதல் - இருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே கார் மினி லாரியில் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-17 01:31 GMT
விபத்து

தஞ்சாவூர் அண்ணா நகர் சிவாஜி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பழனிதுரை மகன் கிருபா பொன் செல்வன் (34). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் காரில் திருச்சிக்கு சென்று விட்டு செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வல்லம் அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுத்திட்டு மீது ஏறி எதிர் திசைக்குச் சென்று, எதிரே நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

Advertisement

இதனால் பலத்த காயமடைந்த கிருபா பொன் செல்வன் நிகழ்விடத்திலேயே உயரிழந்தார். பலத்த காயமடைந்த மினி லாரி ஓட்டுநரான காரைக்கால் திரு நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாசமுத்திரம் ஏரி பகுதியைச் சேர்ந்த தாஸ் மகன் மேத்யூ (26) தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன் உயிரிழந்தார். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News