டூவீலர் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல் - இளைஞன் படுகாயம்
டூவீலர் சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல். இளைஞன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
By : King 24x7 Angel
Update: 2024-03-09 08:41 GMT
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ஏ வி ஆர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி மகன் இளங்குருநாதன் வயது 23. இவர் மார்ச் 6-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில், கோடங்கிபட்டியில் இருந்து சின்னம்ம நாயக்கன்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் பெருமாள்பட்டி பழனியம்மாள் வீடு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, கரிக்காலி அருகே உள்ள இஞ்சிகிணத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 37 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் இளங்குருநாதன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த இளங்குருநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இளங்குருநாதன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக சரக்கு வேனை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.