இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-12 09:00 GMT

ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பின்னால் வந்த லாரி கால் மீது ஏறி இறங்கியது உறவினர்கள் சாலை மறியல் சந்தைக்கோடியூர் பகுதியில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கிழே விழுந்த வாலிபர் மீது லாரி ஏறி இறங்கியதால் வாலிபரின் கால்கள் நசுங்கியது நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் வராததால் உறவினர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை அருகே சந்தைகோடியூர் பகுதியைச் சேர்த்தவர் பெருமாள் இவரது மகன் சங்கர் மற்றும் மணி இவரது மகன் குமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது சந்தை கோடியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றார் இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது வாணியம்பாடி இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரி கீழே விழுந்திருந்த சங்கர் கால் மீது லாரி ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது இதனால் இரண்டு கால்கள் நசுங்கியது. இதனால் அங்கிருந்த உறவினர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரததாதல் மற்றும் சாலையில் பேரி கார்டு அமைக்க கோரி திடிரென சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதில் பொது மக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News