நாமக்கல் பாஜக மகளிர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி

நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் வரை மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-06 06:51 GMT

சர்வதேச மகளிர் (மார்ச் -8) தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேசிய மற்றும் மாநில தலைமை உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் பேரிலும் இன்று (மார்ச் -6) நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் பாஜக மகளிர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணியை நாமக்கல் மாவட்ட மகளிர் அணி தலைவர் சித்ரா தலைமையில் நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் வரை மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 

இப்பேரணியை மாநில மருத்துவ பிரிவு செயலாளர் Dr.ஷியாம் சுந்தர், நாமக்கல் நகர தலைவர் K.P. சரவணன் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர்கள் சேதுராமன்,ரவி, முத்துக்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Tags:    

Similar News