முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரண்டாண்டு சிறை
மயிலாடுதுறை அருகே தாக்குதல் வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது,
2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் கல்யாணம் வசிக்கும் பகுதியில் உள்ள தங்கசாமி குடும்பத்தினரை அதிமுகவில் இணைக்கும் முயற்சி நடைபெற்றது. அதிமுகவினரின் இந்த செயலை குத்தாலம் கல்யாணம் உறவினர்கள் கண்டித்துள்ளனர், இதற்கிடையே 2012 பிப்ரவரி 15ஆம் தேதி தங்கசாமியின் மனைவி மீனாட்சியை கல்யாணம் குடும்பத்தினர் தாக்கினார்கள் என்று அதிமுகவினர் அழுத்தம் கொடுத்தனர் . மீனாட்சியின் புகாரின்பேரில் குத்தாலம் கல்யாணம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 6 நபர்கள்மீது குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் கலைவாணியின் விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்., குத்தாலம் கல்யாணம் மற்றும் அவரது மகன் குத்தாலம் அன்பழகன் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏக்கள் என்பதாலும் திமுகவில் உயர் பதவியில் இருந்து வருவதாலும். மேல் முறையீட்டிற்காக ஒருமாதம்வரை தண்டனையை நிறுத்திவைக்க கோரினர், அதனடிப்படையில் ஒருமாதகாலம் அவகாசம் அளித்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார்.