கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது
குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கு. நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள சின்ன ஏரியில் உள்ள எறுக்கச்செடி புதரில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனையில் இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டு வந்து தெரிந்தது.
இதையடுத்து இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பாச்சாரப்பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் ஹரிகிருஷ்ணன், மீனாட்சிப்பேட்டை வள்ளலார் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கார்த்தி என்கின்ற தமிழரசன் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 33 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.