வரதராஜப் பெருமாள் கோவிலில் வைகாசி உற்சவம்
மணலூர்பேட்டை,அருள்மிகு பிரயோக வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் நடந்த வைகாசி விசாக உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.;
Update: 2024-05-22 05:41 GMT
கருட சேவை
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை, அருள்மிகு பிரயோக வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி விசாக உற்சவத்தினை முன்னிட்டு கருட சேவை சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மேற்படி உற்சவத்தில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி ,பேரூர் செயலாளர் ஜெய்கணேஷ் ,அறங்காவலர் குழு தலைவர் சிவராமன் ,திருக்கோயில் எழுத்தா் து.மிரேஷ்குமாா் ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.