வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிருப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-03-09 11:49 GMT
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன், பொருளாளர் ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வாணாபுரம் தாலுகாவில் 3 வி.ஏ.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்தும், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் முன்னரே, பணியிட மாறுதல் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் ராஜா, இணைச் செயலாளர் ஆதிநாகராஜன், தலைமை நிலைய செயலாளர் வினோத், வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அருள்ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.