வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இ.துரைசாமிபுரம் ஊராட்சியில், சிவசங்குபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.280 இலட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புரணமைக்கப்பட்டு வரும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15.17 இலட்சம் மதிப்பில் சிவசங்குபுரம்
கண்மாய் வரத்து கால்வாயில் உறிஞ்சுக் குழிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், ஏழாயிரம்பண்ணையில் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.2.25 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும், இ.ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.020 இலட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டடங்கள் புரணமைக்கப்பட்டுள்ள பணிகளையும்,
இ.ராமநாதபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டுள்ளதையும், சங்கரபாண்டியபுரம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.77 இலட்சம் மதிப்பில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், குகன்பாறை ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.