வித்யாலட்சுமி பள்ளி 7ம் ஆண்டாக 100 சதவீதம்

கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி பள்ளி 7ம் ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.;

Update: 2024-05-12 08:04 GMT

கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி பள்ளி 7ம் ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


பத்தாம் வகுப்பு தேர்வில் கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி கார்த்திகா தமிழில் 93, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 94, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 100 என மொத்தம் 485 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் ஹேமலதா வாசுதேவன், பள்ளி முதல்வர் ஜெயராமன் பாராட்டினர். அனைத்து வழித்தடங்களுக்கும் பஸ் வசதி கொண்ட இப்பள்ளியில் தற்போது எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரை அட்மிஷன் நடக்கிறது. சிலம்பம், வாள் பயிற்சி, வில்வித்தை போன்ற தற்காப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது என தாளாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News