விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-07-02 12:02 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறியுள்ள உரிமங்கள் ஏதும் இருந்தால் அதனை ரத்து செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளருக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும்.

மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள், சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ரகசிய தகவல்களை அளிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, மகளிர் சுய உதவிக்குழு,

ரேஷன் கடை பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி புதுச்சேரி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருளை தொடர்ந்து விற்பனை செய்து வரும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினரிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்- கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News