குழந்தைகளுக்கான நடைபயண விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் குழந்தைகளுக்கான நடைபயணம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-11-18 03:47 GMT

பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கான நடை பயணம் விழிப்புணர்வு பேரணியை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நவம்பர் 14ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம், 19ஆம் தேதி உலக குழந்தைகள் எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், 20ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடை பயணம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி வேலூர் சாலை வழியாக வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மீதான அனைவரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், குழந்தைகளுக்கான சட்டங்கள், திட்டங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு, இளைஞர் நிதிக்குழுமம், குழந்தைகள் உதவி எண் 1098 என்பதை குறித்து கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு நாடகம், நடனம், பாடல்கள், கருத்துப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பா. கந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் பூ. மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ். செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சின்னப்பன், வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். உஷா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News