திமுகவை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள் - கே.என்.நேரு

பிரதமர் மோடி மட்டுமல்ல திமுகவை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காணாமல் போவார்கள் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

Update: 2024-03-10 05:07 GMT

அமைச்சர் கே என் நேரு 

 மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் டி மூர்த்தி ஆகியோர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்று பேசினார் .

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது திமுக எதிர்கட்சியாக இருந்த போது கூட பணம் கொடுக்காமல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்தோம். மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், மகளிர் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பெண்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளனர். மதுரை புறநகர் தொகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகள் விருதுநகர் பாராளுமன்றத்திலும் சோழவந்தான், உசிலம்பட்டி உள்ளிட்ட தொகுதிகள் தேனி தொகுதியிலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது, நான் நிறைய கூட்டங்களை நடத்தி புகழ் பெற்றவன் என பேச்சை தொடங்கிய அமைச்சர் நேரு தலைவரின் சாதனைகளை சொல்லாமல் போனால் அமைச்சராவதற்கே தகுதியில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே சிறந்த முதல் வராக இருந்து வருகிறார். மகளிர் உரிமை தொகை, பேருந்தில் இலவச பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை நமக்கு தர மறுக்கிறார்கள் அப்படி இருந்தும் சிறப்பான நிதி நிலை அறிக்கையை முதல்வர் கொடுத்துள்ளார். மோடி மாதந்தோறும் தமிழகம் வருகிறார் .மோடி பேசியபோது தேர்தலுக்கு பின் திமுக இருக்காது என சொல்லியுள்ளார். மோடி மட்டுமல்ல திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என பேசினார் .தொடர்ந்து பேசிய அவர் மதுரைக்கு விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் வரவுள்ளது. மூன்று ஆண்டில் 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கியுள்ளார் முதல்வர். மத்திய அரசு லஞ்ச ஒழிப்பு துறை, அமலாக்கதுறை என தமிழக அரசை மிரட்டபார்க்கின்றார்கள்.

ஆனால் நமது முதல்வர் அதை எதிர்த்து போராடி வருகிறார். என்னடா பேசிய அமைச்சர் கே என் நேரு அமைச்சர் மூர்த்தியை பார்த்து பதிவுத் துறையின் மூலம் அதிக வருமானங்களை கொடுப்பதாக தெரிவித்தார் எனவும் பணம் கொடுக்கும் பகவானாக அமைச்சர் மூர்த்தி இருக்கிறார் அவர் நிறைய கொடுக்க வேண்டும் என பேசினார். உங்களுக்காக உதவும் முதல்வருக்கு உங்கள் ஆதரவு வேண்டும். உங்கள் ஆதரவு தொடருமேயானால் அடுத்த 5 ஆண்டு மட்டுமல்ல 50 ஆண்டிற்கும் ஸ்டாலின் தான் முதல்வர் என தனது பேச்சை அமைச்சர் நேரு நிறைவு செய்தார்.

Tags:    

Similar News