குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக கனமழை
Update: 2023-12-07 11:52 GMT
கனமழை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் திடிரென இருள் மேகங்கள் சூழ்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மழையினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.