குமரியில் தந்தை கொலை வழக்கில் பெண்ணுக்கு கை குழந்தையுடன் சிறை
குமரியில் தந்தை கொலை வழக்கில் பெண்ணுக்கு கை குழந்தையுடன் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (65) . இவரது மனைவி பிரேமலதா (61) இவர்களுக்கு சுபிதா ஷாலி (29) என்ற மகள் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்ப முன்பு குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜோ (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது சில மாதங்களாக சுபிதா ஷாலி பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஜோ வுக்கும் அவரது மாமனார் மாமியார் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோ இருவரையும் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயமடைந்த சகாதேவன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரேமலதா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஜோ அவரது மனைவி சுமிதா ஷாலி ஆகிய இருவர் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பின்னர் ஜோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜோ-வை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகாதேவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாகியிருந்த அவரது மகள் சுபிதா ஷாலியை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த சுபிதா ஷாலியை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் தக்கலை சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் ஆறு மாத கைக்குழந்தையும் சிறையில் உள்ளது. கைக்குழந்தை இருப்பதால் குழந்தையை கவனித்துக் கொள்ள வசதியாக சுபிதா ஷாலியை மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது.