நான்கு சக்கர வாகன மோதி பெண் பலி

விருதுநகர் மாவட்டத்தில் நான்கு சக்கர வாகன மோதி பெண் பலி.;

Update: 2024-03-14 17:12 GMT

காவல்துறை விசாரணை

விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் பகுதியைச் சார்ந்தவர் செல்லம்மாள் வயது 62 . இவர் மளிகை கடை வைத்து தொழில் நடத்தி வருவதாகவும், விருதுநகர் சிவகாசி சாலையில் ஹரிராம் கெமிக்கல் கம்பெனி அருகே சாலையை கடக்க முயற்சி செய்த போது மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டாடா நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்லம்மாள் தூக்கி வீசப்பட்ட நிலையில் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் திருத்தங்கள் அரசு மருத்துவமனையில் செல்ல சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்லம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News