நாகப்பட்டினத்தில் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

நாகப்பட்டினத்தில் பழைய கார்கள் வாங்கி உடைத்து விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2024-02-29 10:22 GMT

 தீ விபத்து 

நாகப்பட்டினத்தில் பழைய கார்கள் வாங்கி உடைத்து விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. நாகப்பட்டினம் வடக்கு பால்பண்ணை சேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பழைய நான்கு சக்கர வாகனம், இரண்டு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் ஆகியவற்றை விலைக்கு வாங்கி அதை உடைத்து உதிரி பாகங்களாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடையில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அப்போது, கடையில் இருந்த பழைய டயர், ஆயில் ஆகியவற்றில் தீ பட்டதில் வெடித்து சிதறியது. தகவல் அறிந்த நாகப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் பரவி மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதை அறிந்த மாவட்ட தீயயணைப்பு அலுவலர் சரவண பாபு உத்தரவின் பேரில்  கீழ்வேளூர், திருமருகல், டி சென்னை பெட்ரோலியம் பே கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்களும் ஒன்றாக சேர்ந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்
Tags:    

Similar News