இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-19 05:41 GMT
தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி அடுத்த பெரிய கொரக்கோட்டையை சேர்ந்த சரஸ்வதிக்கும், தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமாருக்கும் (31) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் சரஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் சரஸ்வதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வந்தவாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.