குடும்பத்தகராறில் கணவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம்,மீனவேலி பகுதியில் குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-17 04:17 GMT

தற்கொலை 

விராலிமலை ஒன்றியம் மீனவேலி கிராமத்தை சேர்ந்தவர் மாகாளி(28). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாகாளி கடந்த 14ம் தேதி இரவு உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு மாகாளி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News