நோய்க் கொடுமையால் வாலிபர் தற்கொலை தஞ்சையில் சோகம்

நோய் கொடுமை தாங்காமல் தஞ்சையைச் சேர்ந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-25 16:51 GMT

தற்கொலை

தஞ்சை அருகே பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (27). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்று வலி அதிகரித்ததால் யாரிடமும் தெரிவிக்காமல் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

பின்னர் மருத்துவக் கல்லுாரி சாலை சிந்தாமணி என்ற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாராம்.தகவலறிந்த தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News