பைக் விபத்தில் இளைஞர் சம்பவ இடத்தில் மரணம்
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2024-04-28 09:53 GMT
விபத்தில் பலி
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தை சேர்ந்த பட்டன் மகன்கள் அருண்குமார் (18), மதன்குமார் (16). இவர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று (ஏப்.27) இரவு தாழையூத்தில் இருந்து நெல்லை சந்திப்புக்கு பைக்கில் வந்த பொழுது பைக் கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளாகி மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.