கயிற்றால் கழுத்து இறுக்கி வாலிபர் படுகொலை
விழுப்புரம் மாவட்டம், பாதிரி பஞ்சாயத்து பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனம் அருகே பாதிரி பஞ்சாயத்து எல்லையில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் மர்மமான செய்யப்பட்ட முறையில் இறந்து கிடப்பதாக ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், பாரதிதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வாலிபர் உடலை பார்த்தனர்.
ஆனால் அந்த வாலி பர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரிய வில்லை அவரது தலையில் வெட்டுக்காயமும், கழுத்து இறுக்கப்பட்டதற் கான காயமும் இருந்தன. மேலும் இடது பக்க மார்பில் உமா என பச்சைகுத்தப்பட்டுள்ளது. இதனால் காதல் விவகாரத்தில் அவரை யாரோ மர்ம நபர்கள் இரும்பு ஆயுத்ததால் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் படுகொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து தடவியல் நிபுணர் சுரேஷ் வரவழைக்கப்பட்டு அவர் அங்கிருந்த கைரேகைகளை சேகரித்தார். மேலும் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து திண்டி வனம் மார்க்கமாக சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.