இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார்.

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார்.

Update: 2024-12-03 10:45 GMT
இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார். இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் இந்து முன்னணி கரூர் மாநகர தலைவர் கணேஷ் தலைமையில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு மனுவினை கரூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் நிலையத்தில் அளித்த அந்த புகாரில், இந்துக்களின் கலியுக தெய்வமான சுவாமி ஐயப்பனை இழிவு படுத்தும் வகையிலும், தமிழகத்தில் தேவையற்ற மத குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும்,தனது பாடல் வரிகள் மூலம் தவறான கருத்தை பரப்பி கொண்டிருக்கும், நீலம் பவுண்டேசன் என்ற அமைப்பினை சேர்ந்த இசைவாணி என்ற பெண் பாடகி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத வெறுப்பினை ஏற்படுத்தும் சூழலை தடுத்திடு வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்துமுண்ணனி பேரியக்கம் சார்பாகவும், ஐயப்பபக்தர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர்,உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News