ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் டோக்கன் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்

Update: 2024-12-23 14:39 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை மாநில செயலாளர் ஜெரோம் ஜாய் தலைமையில் மனு கொடுத்தனர். ஆன்லைன் டோக்கன் முறையை முழுவதுமாக ரத்து செய்து விழா நடத்தும் குழுவினர் வசம் டோக்கன் முறையை ஒப்படைக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் ஏற்படும் விபத்தில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய காப்பீட்டு த் தொகையை அரசே வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொத்த மாடுபிடி வீரர்களையும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க இரு குழுவாக பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். வெள்ளோடு, குட்டத்து ஆவாரம்பட்டி, உலகம்பட்டி, நல்லாம்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். மனு கொடுத்த பின்பும் ஆன்லைன் டோக்கன் வழங்கினால் பெரிய அளவிலான போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

Similar News