கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி தொழில் நுட்பத்துடன் கூடிய செட்டப் பாக்ஸ் வழங்கும் பணி! நாமக்கல் மாவட்டத்தில் துவங்கியது.....
ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து முதல் கட்டமாக 8,000 HD செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றுள்ளன.
அரசு கேபிள் டிவி சார்பில் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 8,000 செட்டப் பாக்ஸ் முதல் கட்டமாக வரப்பெற்றுள்ள நிலையில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய ஹெச்டி பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது..தனியார் நிறுவன செட்டப் பாக்ஸ் விலையை விட குறைவான விலையில் உள்ள அரசு செட்டப் பாக்ஸால் தங்களது வாழ்வாதாரம் உயரும் என்பதினால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கிட வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டிவி சார்பில் புதிய செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி துவங்கி உள்ளது.அதன்படி ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து முதல் கட்டமாக 8,000 HD செட்டாப் பாக்ஸ்கள் வரப்பெற்றுள்ளன. நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த HD செட்டாப் பாக்ஸை அரசு கேபிள் டிவி துணை மேலாளரும் தனி வட்டாசியருமான ராஜா, கேபிள் ஆபரேட்டர்களுக்கு இந்த புதிய செட்டாப் பாக்ஸ்களை வழங்கும் பணியினை துவக்கி வைத்தார் அரசு கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்வத்துடன் ஆன்லைனில் 500 ரூபாய் செலுத்தி விட்டு புதிய செட்டாப் பாக்ஸ்களை வாங்கி செல்கின்றனர்.குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கொண்ட இந்த செட்டாப் பாக்ஸ் படிப்படியாக அனைத்து அரசு கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதனால், குறைந்த விலையில் அதி உயர் தரத்துடன் (HD) செட்டாப் பாக்ஸ் வழங்கியதால் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வாழ்வாதாரம் உயரும் என என்பதினாலும்,தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வர் மற்றும் துணை முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளையும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வில் மாவட்ட தொழில்நுட்ப அலுவலர் சதீஷ்குமார், உதவி தொழில் நுட்ப அலுவலர்கள் வரதராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் அரசு கேபிள் டிவி புதிய செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அந்தந்த மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி சேனல்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது படிப்படியாக அனைத்து உள்ளூர் சேனல்களும் சேர்க்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.....