கோவை: எல்பிஜி டேங்கர் விபத்து !

கோவை பீளமேட்டில் உள்ள பாரத் கேஸ் குடோனுக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.

Update: 2025-01-03 05:42 GMT
கோவை பீளமேட்டில் உள்ள பாரத் கேஸ் குடோனுக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. கொச்சினில் இருந்து புறப்பட்ட இந்த லாரியின் ஆக்ஸில் உடைந்து டேங்கர் சாலையில் விழுந்ததில், வாயுக் கசிவு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து லாரி ஓட்டுநர் உடனடியாக பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிறுவன அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் வாயுக் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, பாரத்கேஸ் நிறுவன பொறியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாயுக் கசிவு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Similar News