மதுரை காவல் துறைக்கு புதிய துப்பறியும் நாய் 'புகழ் '.
மதுரை காவல் துறைக்கு புதிய துப்பறியும் நாய் இணைக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாநகர காவல் துப்பறியும் நாய் படை பிரிவில் வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், குற்றங்கள் போன்றவற்றை கண்டறிய 7 நாய்கள் உள்ள நிலையில் நேற்று ( மார்ச்.17) 40 நாட்கள் ஆன லேபர் டாக் இனத்தைச் சேர்ந்த நாய் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நாய்க்குட்டிக்கு “புகழ்” என பெயர் சூட்டினார். மேலும் நாய்க்குட்டி 10 மாதங்கள் நன்றாக வளர்ந்த பின்பு பயிற்சி அளிக்கப்பட்டு, பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.