கரூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.
கரூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.;
கரூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் குறித்து போராட்டத்தில் ஈடுபட இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கைது செய்யப்பட்ட அண்ணாமலையை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறி கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நேற்று மாலை திரண்டிருந்தனர். அப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது, அவர்கள் 1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்தும், தமிழக அரசு பதவி விலக கோரியும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.