கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபர் கைது;

திண்டுக்கல் அருகே லட்சுமணன் பட்டி நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணம் தருமாறு ஒரு நபர் மிரட்டி கொண்டு இருந்தார். அப்பொழுது வழியாக ரோந்து சென்ற வேடசந்தூர் போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். போலீஸ் விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் சேடப்பட்டி சேர்ந்த ஹவுஸ் பாண்டி வயது 28 என்பதும் இவர் மீது கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஹவுஸ் பாண்டியை கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தார்.