விண்வெளி வீரர்களை வரவேற்ற விஞ்ஞானிகள்
மதுரையில் விண்வெளி வீரர்களை வரவேற்ற விஞ்ஞானிகள்;
மதுரை தெற்கு வாசல் மஞ்சணக்காரத் தெரு பகுதியில் செயல்படும் சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் வரவேற்கும் விதமாக அரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலிலியோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சி.வி.ராமன் உள்ளிட்ட அறிவியல் விஞ்ஞானிகள் போல் முகமூடி அணிந்து வரவேற்றனர்.