ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்
ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்;

செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகரில் இரு இடங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக (விா்கோ பாலிமா்) என்ற தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளா்களும், ஒப்பந்த தொழிலாளா்கள் 200க்கு மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு மட்டும் முழு ஊதியத்தை வழங்கப்பட்டு வந்ததாகவும், நிரந்தர தொழிலாளா்களுக்கு கடந்த 8 மாதங்களாக முறையான ஊதியத்தை வழங்காமல் தொழிற்சாலை நிா்வாகம் அலைக்கழித்துள்ளது.இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக தொழிற்சாலைக்குள் நிரந்தர தொழிலாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், நிரந்தர தொழிலாளா்களை நிா்வாகத்தினா் வலுகட்டாயமாக தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொழிற்சாலை முன்பு திங்கள்கிழமை காலைமுதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.மேலும் தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து இந்த பிரச்சனைக்கு தீா்வு காணவேண்டும் என நிரந்தர தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.