உடையார்பாளையம் வேலப்ப செட்டியார் ஏரிக்கு தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் முன்புறம் அமைய உள்ள ராஜகோபுரம் கட்டும் பணிக்கு தர்மம் செய்பவர்கள் செய்யலாம்.
உடையார்பாளையம் வேலப்ப செட்டியார் ஏரிக்கு தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் முன்புறம் அமைய உள்ள ராஜகோபுரம் கட்டும் பணிக்கு தர்மம் செய்பவர்கள் செய்யலாம் அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.;

அரியலூர், மார்ச்25- உடையார்பாளையம் அறங்காவலர், விழா குழுவினர் ஓர் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:- உடையார்பாளையம் வேலப்பன்செட்டியார் ஏரிக்கு தென்புறம் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலின் முன்புறம் ராஜகோபுரம் கட்டும் பணி மக்களின் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இப்பணியில் இதுவரை தர்மம் செய்து பங்கு பெறாத அன்பர்கள் தாங்களாக முன்வந்து தர்மம் செய்து புண்ணிய பலனை பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் வருகிற 2.7.2025 புதன்கிழமை அன்று ராஜகோபுரம் மற்றும் மூலவர் பரிவாரங்களுக்கும் சேர்த்து மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது, என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம் அதிகபட்சம் 5,000 தர்மம் செய்பவர்கள் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படும் என அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.