வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல் பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் தங்கும் விடுதி மற்றும் உணவகங்களுக்கு செல்லும் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்;

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது இந்நிலையில் லேக் சந்திப்பு ,7 ரோடு, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் அதிகம் உள்ளது அப்பகுதியில் முறையான வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் சாலையில் வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர் மேலும் அப்பகுதியில் குறுகிய சாலை என்பதால் ஒரே நேரத்தில் இரு வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது மேலும் 7 ரோடு பகுதியில் சுற்றுலாப் பயணி உணவகத்திற்கு செல்வதற்கு வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு சென்றதால் அரசு பேருந்துகள் கடந்து செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது இதனால் சாலையின் இரு பக்கங்களும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டது சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வாகனங்களை எடுக்க போக்குவரத்தை சரி செய்தனர் மேலும் இப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரை பணி நியமித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்று கருதப்படுகிறது.