ஊத்தங்கரையில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு.
ஊத்தங்கரையில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் நேசம் தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எழிலரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் காசநோய், புற்றுநோய், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் உடல் உபாதை குறித்த உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.