நாளைய தினம் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்.
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகள் மதுரை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

தமிழகத்தில் நாளை (மார்ச்.28) முதல் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மேலூர் கல்வி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 254 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 775 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மதுரை கல்வி மாவட்டத்தில் 232 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 708 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதன்படி மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 486 பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 483 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.இத்தேர்வுகள் மதுரை மத்திய சிறை உட்பட 146 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க 150க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.