கரூரில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூரில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-03-27 12:38 GMT
  • whatsapp icon
கரூரில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் பொது சுகாதாரத் துறையில் 100% காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை எண்- 2 பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு PHDOA அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பொன்ராம் ரத்தினவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் சண்முகவேல் உள்ளிட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News