திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அமைச்சர் பங்கேற்பு

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அமைச்சர் பங்கேற்பு;

Update: 2025-03-30 14:09 GMT
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. நெடுங்குன்றம் மெயின் ரோட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்புரையாற்றினார். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், கழக தீர்மான குழு தலைவர் கவிஞர் தமிழ் தாசன், தலைமைக் கழக பேச்சாளர் போடி காமராஜ்,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம். டி. லோகநாதன்,ஒன்றிய பெறுப்புக்குழு உறுப்பினர் ஏ .ஜே .ஆறுமுகம்,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன்,காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன்,மற்றும் அவைத்தலைவர், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,வார்டு கவுன்சிலர்கள்,இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள்,ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News