எம்டிசி-யில் பட்டதாரிகளுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி

தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.;

Update: 2025-03-30 18:44 GMT
எம்டிசி-யில் பட்டதாரிகளுக்கு ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி
  • whatsapp icon
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், சிவில், இசிஇ, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியியல், டிப்ளமா மற்றும் இளநிலை பட்டம் முடித்தவர்களி டம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் ஏப்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News