ஓசூரில் சரக்கு வேன் மோதி வாலிபர் உயிரிழப்பு.
ஓசூரில் சரக்கு வேன் மோதி வாலிபர் உயிரிழப்பு.;

கிருஷ்ணகிரி மவட்டம் ராயக்கோட்டை கவுரிபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (27) இவர் ஒசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவம் அன்று அவர் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் டூவீலரில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் நவீன்குமார் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மெற்கொண்டு நடத்தி வருகிறார்கள்.