அன்பு, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வளரட்டும் - விஜய் ரமலான் வாழ்த்து

தமிழகத்​தில் இன்று (மார்ச் 31) ரம்​ஜான் பண்​டிகை கொண்​டாடப்​படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-31 07:39 GMT
  • whatsapp icon
இதனையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களிடன் அன்பைப் பரிமாறி ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்த்து அட்டையாக இதனை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து அட்டையில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் படங்கள் இடம்பெற்றுள்ளன.

Similar News