நத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
நத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது, 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் - மதுவிலக்கு காவல் துறையினர் நடவடிக்கை;

திண்டுக்கல், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம் அருகே ஊராளிபட்டி பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்த அப்துல்ரகுமான் மகன் சையது காட்டுபாவா(35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.