தர்மபுரி மின் கோட்ட அளவிலான குறைத்தீர் முகாம்
தர்மபுரி மின் கோட்ட அளவிலான குறைத்தீர் முகாம் செயற்பொறியாளர் அறிவிப்பு;
தர்மபுரி கோட்ட செயற்பொறியாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தருமபுரி மின் பகிர்மான வட்டம், தருமபுரி கோட்டத்திற்குட்பட்ட மின் இணைப்புகளில் மின் கணக்கீடு சம்பந்தமான குறைபாடுகள், குறைந்த மின் அழுத்த புகார்கள், பழுதடைந்த மின் மீட்டர் மற்றும் மின் கம்பம் மாற்றுதல் தொடர்பான புகார்கள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு சிறப்பு முகாம் 05.04.2025 சனிக்கிழமை அன்று தருமபுரி கோட்ட அலுவலகத்தில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் 05.04.2025 அன்று செயற்பொறியாளர் / இயக்கமும் பராமரிப்பும் / தருமபுரி அலுவலகத்திற்கு வருகை தந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.